வவுனியாவில் இருந்து நாடகம் தொடர்பான போட்டிக்கு யாழ்ப்பாணம் வந்த 15 வயதுடைய யோகேஸ்வரன் கிரிதரன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று யாழ்.மத்திய கல்லூரியில் நாடகம் தொடர்பான பயிற்சி இரவு 11.45 வரை நடைப்பெற்றுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்ட யோகேஸ்வரன் கிரிதரனும் இன்னும் சில மாணவர்களும் யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தில் நீந்திய போதே இப்பரிதாப சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
நீந்த தெரியாத யோகேஸ்வரன் கிரிதரன் நண்பர்களுடன் நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.
யோகேஸ்வரன் கிரிதரனுடன் நீந்திய ஏனைய மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சடலம் மீட்கபப்ட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கபட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து நாடகப் போட்டிக்கு யாழ்ப்பாணம் வந்த வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்கள் யாழ் மத்திய கல்லூரியில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
By:-yasikanth