Pages

Pages

பூந்தோட்டம் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பெரியகுளம், பூந்தோட்டம் பிரதேசத்தில் இருந்து பொலிஸாரினால் சடலம் ஒன்று மீட்கப்படடுள்ளது.
இந்தச் சடலம் நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர் வயல் வெளிப் பிரதேசத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்டகப்பட்ட வேளையில் அங்கிருந்த தேசிய அடையாள அட்டையின் படி உயிரிழந்தவர் 39 வயதான சண்முகம் இராஜதுறை என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

By:-yasi