Pages

Pages

செட்டிக்குளத்தில் 9 பேர் கைது

செட்டிக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்துவதற்கு தயாராகவிருந்த ஒன்பது பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குருக்கள், புதுக்குளம் முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் செட்டிக்குளம் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அனுமதியின்றி கொண்டுசெல்வதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் வவுனியா வனப்பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

By:-yasikanth