Pages

Pages

வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு


வவுனியா உக்கிளாங்குளம் மைதானம் ஒன்றிலிருந்து 03.02.2012ம் திகதி அன்று மதியம் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஓருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநெச்சி ஸ்கந்தபுரத்தைச்சேர்ந்த இரா.கிருபாகரன் வயது 24 என்று வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்களை பொலிஸார் வலைவீதித் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.