வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு
ஐப்பான் இலங்கை நட்புறவுச் சங்கத்தின் ஸ்தாபகரும் பொல்பொல விபாசி மன்றத்தின் தலைவருமான வணக்கத்துக்குரிய பெல்பொல விபாசி தேரோவின் பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சிறிடெலோ கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இதற்கான நிகழ்வில், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்வில் வணக்கத்துக்குரிய பெல்பொல விபாசி தேரோ, வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு க.கந்தசாமி குருக்கள், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், சிறிடெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.