வவுனியாவில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்

குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள கரையான் குளத்தில் நேற்று மாலை தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வவுனியா தமிழ் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த பிரபாகரன் சஜீபன் என்ற மாணவனே நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார். இவர் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதரணப் பரீட்சையில் தோற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரணவிசாரணைகள் வவுனியா மாவட்ட பதில் நீதிபதி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.