வவுனியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் படுகாயம்

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் இளைஞனொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த ரூபன் என்ற இளைஞனே படுகாயமடைந்தநிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலே இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காக காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
by:-s.s.yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.