வடக்கில் பணியாற்ற 35 வைத்தியர்கள்

உள்ளகப் பயிற்சியை முடித்து வெளியேறிய 238 வைத்தியர்களுக்குச் சுகாதார அமைச்சினால் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களில் வடக்கில் பணியாற்றவென 35 வைத்தியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலைக்கு 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலை, கிளிநொச்சிப் பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்குத் தலா ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு 4 பேரும், மன்னார் பொது வைத்தியசாலைக்கு 4 பேரும், வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு 4 பேரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 2 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பளை பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவரும், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தரவுகள் தெரிவித்தன.
கொழும்பு நாரஹேன்பிட்டியவில் உள்ள தேசிய இரத்த பரிமாற்று நிலையத்தில் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அனைவருக்கும் நியமனக் கடிதங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வைத்தியர்கள் அனைவரும் அந்தந்த வைத்தியசாலைகளில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.