இலட்சங்களை கொட்டும் கேபிள் ரிவியால் யாழில் குத்துவெட்டு
அலெக்ஸ்குமார் என்னும் கேபில் ரிவி இயக்குனர் டான் ரிவியிடமிருந்து இணைப்பைப்பெற்று ஒரு வருடமாக தனது பகுதியில் விநியோகித்தது மட்டுமன்றி வவுனியா மன்னார் மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலும் டான் ரிவியின் கேபிளை இயக்குவதற்கு டான் ரிவிக்காhக முன்நின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
கேபில் ரிவி இயக்குனர் அலெக்ஸ்குமார், டான் ரிவிக்கு செலுத்தவேண்டிய பணத்தை தொடர்ந்தும் செலுத்தாத காரணத்தாலேயே டான் ரிவி தனது இணைப்பை எவ்வித அறிவித்தலுமின்றி துண்டத்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலெக்ஸ்குமார் தன்னிச்சையாக கேபிள் ரிவியை நடாத்தியதுடன் தனக்கு நீதிமன்றம் அனுமதி தந்திருப்பதாக சொல்லி வந்த நிலையிலேயே கொழும்பிலிருந்து சென்ற தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதிகாரிகள் அவர் வீட்டை முற்றிகையிட்டு ஏராளமான கேபில் ரிவி க்குரிய பொருட்களை கைப்பற்றி சென்றமை குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அமைச்சா டக்ளஸ் தேவனந்தா தற்போது அலெக்ஸ்குமாருக்கு ஆதரவு வழங்கி வருகிறார். டான் ரிவி தன்னை மிரட்டுவதாக குற்றம் சுமத்திய அலெக்ஸ்குமார் தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவின் ஆசியுடன் சாதாரணமாக இயங்கும் கேபில் ரிவி இயக்குனர்களை மிரட்டி யாழ்ப்பாணத்தில் இயங்கும் மற்றொரு பேபில் வழங்குனரிடம் இணையுமாறு அச்சுருத்தி வருவதாக ஏனைய சாதாரண நிலையிலான கேபில் ரிவி இயக்குனர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
டான் ரிவியின் பணிப்பாளர் எஸ்.எஸ். குகநாதனுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான உறவு தற்போது விரிசலடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவின் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பல யுக்திகளையும் டான் தொலைக்காட்சி செய்தமை குறிப்பிடத்க்கது. இருந்தும் கூட்டமைப்பே வெற்றி பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் மற்றொரு கேபில் ரிவி வழங்குனரிடம் இருந்து பெரும் தொகை பணம் அமைச்சரின் தம்பிக்கு செல்வதாலேயே அமைச்சருக்கும் டான் ரிவி பணப்பாளருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
டான் ரிவி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது என மக்கள் உணரும் அளவுக்கு டான் ரிவி அமைச்சருக்கு துதி பாடிய நிலையில் டான் ரிவியை அமைச்சர் கை விட்டுள்ளார்
முன்னர் பாதுபாப்பமைச்சின் அனுமதியின்றி வடகிழக்கில் கெமராக்களை எடுத்து செல்ல முடியாமல் இருந்த காலம் தொடக்கம் இன்று வரை வடகிழக்கில் அமைச்சரின் செல்வாக்கையும் படையினரின் செல்வாக்கையும் பயன்படுத்தியே டான் ரிவி கெமராவுடன் எல்லா இடங்களுக்கும் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
By:-yasikanth