Pages

Pages

சிறைச்சாலையில் இரு கைத்தொலைபேசிகளை விழுங்கிய சிறைக் கைதி


சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டை விழுங்கியதாகக் கூறப்படும் சிறைக்கைதி ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
குறித்த சிறைக் கைதி வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றுக்காக அழைத்துச் சென்று மீண்டும் சிறைச்சாலை வரும்வேளை கையடக்கத் தொலைபேசிகள் இரண்டையும் விழுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வயிற்றுக்குள்ளிருந்த கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்று அலறியபோது அவரது வயிற்றிலும் தொண்டைப் பகுதியிலும் வேதனை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி சந்தேகநபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.