Pages

Pages

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா, ஆவிபுரம், மராபன ஒழுங்கையில் நபரொருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த முருகேசு மஹீபாரன் (47 வயதான) என்பவரே சடலமாக இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.