Pages

Pages

வவுனியா சிறைச்சாலையில் பொலிஸார் பாரிய தேடுதல்

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து, அங்கிருந்த 212 கைதிகளில் 205பேர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து 30-06-2012 வவுனியா பொலிஸார் சிறைச்சாலையில் பாரிய தேடுதல் ஒன்றினை நடத்தினர். வவுனியா பொலிஸாருடன் இணைந்து, சிறைக்காவலர்கள், விசேட அதிரடிப்படையினரும் இத்தேடுதலில் ஈடுபட்டதுடன் கைதிகளின் பாவனையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
இதன்போது தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பல பொருட்களை கைதிகள் தம் வசம் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இத்தேடுதல் நடவடிக்கையினை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேமந்த அதிகாரியின் வழிநடத்தலில், பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தலைமையிலான குழுவினரும் சிறைக்காவலர்களும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டனர்.
By:-yasi