வவுனியா உக்கிளாங்குளம் சீர்திருத்த மைதானத்தில் ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த இரா.கிருபாகரன் என அழைக்கப்படும் 24 வயதுடைய இளைஞன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வெட்டுக் காயங்களுடன், இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
By:-yasikanth