வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் அரச சார்பற்ற அமைப்பொன்றின் உத்தியோகத்தரது ஜீப் வண்டியொன்று இனந் தெரியாதவர்களால் 22 ஏப்ரல் 2012ஞாயிற்றுக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் அரச சார்பற்ற அமைப்பொன்றின் தொழில்நுட்ப ஆலோசகரின் வாகனத்தின் மீதே தீ வைக்கப்பட்டுள்ளது.
ஜீப் வண்டிக்கு தீ வைத்தவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By:-yasikanth
