Pages

Pages

செட்டிக்குளத்தில் உலோகத்துண்டுகளை தங்கம் என கூறி விற்பனை செய்த இருவர் கைது!

வவுனியா செட்டிக்குளத்தில் புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட தங்கம் எனக் கூறி, உலோகத்துண்டுகளை விற்பனை செய்ய முயற்சித்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 635 உலோகத் துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்களை வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By:-yasikanth